/* */

ரேஷன் கடை ஊழியர்களுக்கு புத்துணர் பயிற்சி முகாம் துவக்கி வைத்த கலெக்டர்

இராணிப்பேட்டையில் மாவட்ட ரேஷன் கடை ஊழியர்களுக்கான புத்துணர்வு பயிற்சி முகாமை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் துவக்கிவைத்தார்.

HIGHLIGHTS

ரேஷன் கடை ஊழியர்களுக்கு புத்துணர் பயிற்சி முகாம் துவக்கி வைத்த கலெக்டர்
X

ராணிபேட்டை மாவட்ட ரேஷன் கடை ஊழியர்களுக்கான புத்துணர்வு பயிற்சியை கலெக்டர் தொடங்கிவைத்து பேசினார்.

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த தென்கடப்பந்தாங்கலில் உள்ள திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் மற்றும் மாவட்ட கூட்டுறவு மேலாண்மை நிலையம் இணைந்து மாவட்டத்தில் உள்ள 614 நியாயவிலை கடைகளில் பணிபுரிந்து வரும் 367 விற்பனையாளர்களுக்கு ஒரு நாள் புத்துணர்வு பயிற்சி முகாமை நடத்தியது.

நிகழ்ச்சியை இராணிப்பேட்டை கலெக்டர் கிளாட்டோன் புஷ்பராஜ், துவக்கி வைத்து பேசியதாவது,:

அரசு துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு பல்வேறு பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுவது வழக்கமாகும். பணியை சிறப்பாக செய்ய பயிற்சி வழங்கப்படுகிறது, . அதன் படி, கூட்டுறவுத் துறையில் பல்வேறு பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்படுகிறது.

அதில்,ரேஷன் கடை பணியாளர்கள், அரசு இலவசமாக மற்றும் குறைந்த விலையில் வழங்கும் உணவு பொருட்களை நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு வழங்கி வருகின்றனர்

அரசு வழங்கும் இலவச பொருட்களை எதிர்நோக்கி வாழ்க்கையை நடத்தி வருபவர்கள். பல மனநிலையுடன் உள்ள மக்கள் பொருட்கள் வாங்க வரும்போது கடை ஊழியர்களுக்கும் மக்களுக்கும் பிரச்சனை பெரிய அளவில் ஏற்படுகிறது.

இதனால் ,பணியாளர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும். ஒரே மனநிலையுடன் வரும் மக்கள் என்பது கிடையாது பலதரப்பட்ட மனநிலையுடன் வரும் மக்களை கையாள்வது கடினம் அவர்களிடம் இன்முகத்தோடு நடந்திட வேண்டும் .

நியாய விலைக்கடை ஊழியர்கள் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். சூழலை உணர்ந்து கடைகளில் பணியாளர்கள் பணி புரிய வேண்டும். பொதுமக்களிடம் எவ்வித பிரச்சனைகளுக்கும் புகார்களுக்கும் இடமளிக்கக்கூடாது

இயற்கை பேரிடர், பெருந்தொற்றுக்காலம், எக்காலத்திலும் செயல்படும் மிக முக்கிய அத்தியாவசியப்பணி உணவுப்பொருள் வழங்கல் ஆகும்.

உணவு பொருள் விநியோகத்தின் தூண்களாக செயல்படுவது நியாயவிலைக் கடை பணியாளர்கள் ஆவார்கள். பணியை பெரும் சேவையாக கருதி உணவுப்பொருள் விநியோகம்செய்ய வேண்டும்,

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்ற வரிகளுக்கு ஏற்ப உணவுப் பொருள்களை வழங்குபவர் உயிரைகாப்பவராவர். எனவே அதற்கான பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் இந்த பயிற்சி வகுப்பில் வழங்கப்படுகிறது.

பயிற்சி வகுப்பற்கு ஏதோ கடமைக்காக வந்தோம் என்று இல்லாமல் தங்களுக்கு தெரியாத பல தகவல்களை விஷயங்களை பயிற்சியில் அறிந்து மக்களுக்கு இன்முகத்தோடு சேவையை அளித்திட வேண்டும்.மேலும், கடைகளுக்கு வரும் பொதுமக்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி கூற வேண்டும்..

மாவட்ட நிர்வாகம் தீவிரமாக தடுப்பூசி முகாமை நடத்தி வருகிறது . ஆகவே இந்த .பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.,

கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் குணாஐயப்பதுரை, பொதுவிநியோகதிட்ட துணைப்பதிவாளர் முரளிகண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை,கூட்டுறவு சார்பதிவாளர் பிரபாகரன், ஆசைத்தம்பி,சமூத்திரவிஜயன்,வட்டவழல்கல் அலுவலர் விஜயசேகர் உள்ளிட்டோர் மற்றும் நியாயவிலைக் கடை ஊழியர்கள் கலந்து கொண்டனர்..

Updated On: 28 Aug 2021 3:42 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்