/* */

இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு பயணம்: கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இல்லம்தேடி கல்வி விழிப்புணர்வு பயணத்தை கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு பயணம்: கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
X

இல்இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த கலெக்டர் பாஸ்கரபாண்டியன் 

இராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் செல்லும் இல்லம் தேடிகல்வி விழிப்புணர்வு கலைக் குழுவினரின் 32 நாட்கள் பயணத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் கொடியசைத்து துவக்கிவைத்தார்.

கொரோனா தொற்றுக் காரணமாக பொது முடக்கத்தின் போது 1 முதல் 8 ஆம் வகுப்புவரை படித்து வரும் மாணவர்களின் கற்றல் இடைவெளி இழப்புகளை சரிசெய்யும் விதத்தில் பள்ளி நேரங்கள் தவிர வெளி இடங்களில் , மாணவர்கள் வசிப்பிடம் அருகே சிறிய குழுக்கள், தன்னார்வலர்கள் பங்களிப்புடன் மாணவர்கள் கற்றலில் திறன்பட வைக்க இல்லம் தேடிகல்வி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அதில் ,மாணவர்கள் எளியமுறையில் கற்றல் வாய்ப்பை வழங்கி, அன்றாட கற்றல் செயல்பாடுகளில் படிப்படியாக பங்கேற்கசெய்து பயனடையச்செய்யும் இத்திட்டம் செயல்பட உள்ளது.

இல்லம் தேடி கல்வி திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்த சமூகத்தில் தீவிர விழிப்புணர்வு, மற்றும் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தி முக்கியத்துவம் அடைய தெருநாடகங்கள், பொம்மலாட்டம், பாடல் ஆகியவற்றை உள்ளூர் நாட்டுப்புற கலைஞர்கள் மூலமாக நடத்தப் படுகிறது. அதில் ,பல்வேறு கல்விசார் தகவல் தொடர்பு விழிப்புணர்வு பிரச்சாரங்களை கிராமங்களில் நடத்த கலைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் இடம்பெற்று கலைப்பயணம் செய்யும் 8 குழுக்களிலுள்ள 72 பேருக்கும் 3 நாட்கள் பயிற்சி முகாம் நடந்தப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியத்தைச்சேர்ந்த 1120 குடியிருப்பு பகுதிகள் மற்றும் 740 பள்ளிகளில் தொடர்ந்து 32 நாட்கள் நடத்தப்படவுள்ளது.

மேலும் கலைநிகழ்ச்சிகளின் மூலம் தன்னார்வலர்களை பங்கேற்க வைத்து மாணவர்களின் இடைநிற்றல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். அவற்றை ஆய்வு செய்ய 42 ஆசிரியர் பயிற்றுநர்கள், 41 ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்கொடியசைப்பு விழாவில், மாவட்ட வருவாய்அலுவலர் ஜெயச்சந்திரன், முதன்மைகல்வி அலுவலர் உஷா, மாவட்டக் கல்விஅலுவலர் அங்குலஷ்மி உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Nov 2021 12:45 PM GMT

Related News