/* */

கோ-ஆப்டெக்ஸில் கேரன்டி கார்டுடன் விற்பனை: அமைச்சர் காந்தி அறிவிப்பு

கோ-ஆப்டெக்ஸில் பட்டுப்புடவைகள் கேரன்டி கார்டுடன் போலியின்றி விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் காந்தி அறிவிப்பு.

HIGHLIGHTS

கோ-ஆப்டெக்ஸில் கேரன்டி கார்டுடன்   விற்பனை: அமைச்சர் காந்தி அறிவிப்பு
X

கோ-ஆப்டெக்ஸ் விற்பனையை அமைச்சர் காந்தி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்

தமிழகத்தில் கைத்தறிமற்றும் துணிநூல் துறை சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கைத்தறி ரகங்களுக்கும் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடியுடன் விற்பனையை அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில்,ராணிப் பேட்டையில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனையை துவக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி குத்து விளக்கேற்றி விற்பனையை துவக்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை தொடங்கியுள்ளது. கடந்த 2 மாதத்தில் ₹1 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் விற்பனையை உயர்த்தி ஒரு நாளைக்கு₹ 10 கோடிக்கு இலக்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும்,கெமிக்கல் இல்லாமல் குழந்தைகளுக்கு புதிய வடிவிலான ஆடை ரகங்கள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார். கோ-ஆப்டெக்ஸில் விற்கப்படும் பட்டு புடவைகள் போலித்தன்மை இல்லாமல் கேரன்டி கார்டுடன் விற்பனை செய்யப்பட்டுவருகிறது . அதில் எவ்வளவு பர்சன்டேஜ் தங்கம், சில்வர் எவ்வளவு என்று கார்டுகளில் குறிப்பிட்டு இருக்கும். எனவே பட்டுபுடவைகளை தனியார் விற்பனை மையங்களில் வாங்காமல் சுத்தமான அசல் கைத்தறி பட்டாடைகளை நம்பகத்தன்மையுடன் விற்பனை செய்யும் கோ-ஆப்டெக்ஸில் பொதுமக்கள் வாங்க வேண்டும் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியின்போது ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

Updated On: 22 Oct 2021 3:57 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    CBI Raid-க்கு தேதி குறித்து கொடுத்த திமுக !#annamalai #annamalaibjp...
  2. சினிமா
    யாரிந்த ராஜா வெற்றி பிரபு..?
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  4. வீடியோ
    மத்தியில் கூட்டணி ஆட்சி ! பேரம் பேசிய திமுகவினர் !#annamalai...
  5. லைஃப்ஸ்டைல்
    உறவுகளை எப்படி வகைப்படுத்தலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
  6. திருவண்ணாமலை
    போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்
  7. வீடியோ
    🔴LIVE: கன்னியாகுமரியில் சீமான் தேர்தல் பிரச்சாரம் #seeman #live
  8. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...
  9. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால், ஏமாற்றமே..!