/* */

வேலைக்கு சென்ற மெக்கானிக் ஏரியில் சடலமாக மீட்பு

வாலாஜா அருகே வேலைக்கு சென்ற மெக்கானிக்கை ஏரியில் சடலாமாக மீட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

வேலைக்கு சென்ற மெக்கானிக் ஏரியில் சடலமாக மீட்பு
X

பைல் படம்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த திருமலைச்சேரி கோட்டையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (38). இவர் வாலாஜாவில் உள்ள மெக்கானிக் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி பிரிந்து சென்று விட்டதால் அவருடைய அண்ணன் வீட்டிலேயே தங்கியிருந்து வந்தார்.

இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு வாலாஜாவிற்கு சென்றார். பிறகு நாகராஜன் வீடு திரும்பவில்லை. இதனால், அவரது உறவினர்கள் அவர் வேலை செய்யும் மெக்கானிக் கடை மற்றும் அக்கம் பக்கத்தில் தேடி வந்துள்ளனர்.

அப்போது தேவதானம் அருகே உள்ள தாங்கல் ஏரியில் ஒரு ஆண் சடலம் மிதப்பதாக நாகராஜனுடைய அண்ணன் கிருஷ்ணராஜாவுக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற கிருஷ்ணராஜா சடலமாக இருப்பது தனது தம்பி நாகராஜன் என்பதை உறுதி செய்தார். இதனையடுத்து வாலாஜா போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஏரியில் சடலமாக இருந்த நாகராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 16 Oct 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  5. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  6. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!
  7. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  9. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  10. திருவள்ளூர்
    பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்: புறவழிச்சாலை அமைக்க...