/* */

ராணிப்பேட்டை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

ராணிப்பேட்டையில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்

HIGHLIGHTS

ராணிப்பேட்டை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
X

திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் ஆம்பூர் வருகை தந்தார்.

நேற்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, வேலூர் பேருந்து நிலையம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

இன்று ராணிப்பேட்டை பாரதி நகரில் ரூ.118.40 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். விழாவில் சுமார் 60 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.250 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும் முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

Updated On: 30 Jun 2022 4:31 AM GMT

Related News