/* */

உப்புப்பேட்டையில் 100 சதவீதம் தடுப்பூசி: அமைச்சர் காந்தி பாராட்டு

ஆற்காடு அடுத்த உப்புபேட்டையில் 100சதம் பேருக்கு தடுப்பூசி போட்டு நிறைவு செய்த விழாவில் அமைச்சர் காந்தி பாராட்டி சான்றிதழ் வழங்கினார்

HIGHLIGHTS

உப்புப்பேட்டையில்   100 சதவீதம் தடுப்பூசி: அமைச்சர் காந்தி பாராட்டு
X

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த புதுப்பாடி வட்டார ஆரம்ப சுகாதார வட்டத்திற்கு உட்பட்ட உப்புப்பேட்டையில் கொரோனா தடுப்பூசி முதற்கட்டம் போடும் பணி நிறைவடைந்தது. இதனையடுத்து அங்கு சுகாதாரத்துறை சார்பில் நிறைவு மற்றும் பாராட்டு விழா நடந்தது .

விழாவில் ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் தலைமை தாங்கினார். துணைஇயக்குனர் மணிமாறன் வரவேற்றார். வட்டார மருத்துவர் சுரேஷ்பாபுராஜன் மற்றும் வட்டாட்சியர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் காந்தி மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைவரையும் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார் .

அதனைத்தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். நோய் தடுப்பு பணியில் தனி கவனம் செலுத்தி வருகிறார். அதனால், தனியார் மருத்துவ மனைகளுக்கும் கொரோனா தடுப்பூசிகளை வழங்கி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மக்களைத் தேடி மருத்துவம் என்ற சிறப்பான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதில், மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று மருத்துவம் பார்த்து,மருந்துகளை வழங்கி வருகின்றனர். மருத்துவர்கள் சிறப்பான முறையில் சேவை செய்து சாதனை புரிந்து வருகின்றனர். எனவே,அவர்களை பாராட்டியாக வேண்டும் .

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 13 தொகுதிகளில், ஆற்காடு தொகுதியில் உப்புபேட்டை கிராமம் 100சதவீதம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் கிராமம் என்ற சிறப்பு பெயரை பெற்றுள்ளது. மகிழ்ச்சியுடன் பாராட்டுகிறேன் என்றார்.

மேலும் அவர், இராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 2.88லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அதில், உப்புப் பேட்டையில் மொத்தம் மக்கள் ஆயிரத்து ஐநூற்று 51 பேர்உள்ளனர் . அவற்றில்18 வயதுக்குமேற்பட்டவர்கள் 912பேரும் கொரோனா தடுப்பூசி போட்டு முதல்தவணையை நிறைவு செய்துள்ளனர். அதே போல 2வது தவணையையும். நிறைவு செய்யுமாறு கேட்டுக் கொள்வதாக அமைச்சர் கூறினார்.

விழாவில், சுகாதாரத்துறையினர், வருவாய்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்...

Updated On: 11 Aug 2021 12:15 PM GMT

Related News