/* */

உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்: அதிமுக மீது குற்றச்சாட்டு

உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்: அதிமுக மீது குற்றச்சாட்டு
X

ஆற்காடு திமுக வேட்பாளர் ஈஸ்வரப்பனை ஆதரித்து, ஆற்காடு பேருந்து நிலையத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின்,அதிமுக அரசு மீதும் பாஜக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் பிரசாரத்தில் பேசிய போது,

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்திற்கு டயர்நக்கி என பெயர் வைத்தார். அதிமுக அரசு 15 ஆயிரம் கோடி ஊழல் செய்திருப்பதாக ஊழல் பட்டியலை தமிழக கவர்னரிடம் கொடுத்து விசாரணை நடத்தவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

ஜிஎஸ்டி வரியில் இருந்து தமிழகத்திற்கு 15,000 கோடி திருப்பி தர வேண்டும், ஆனால் மோடி அரசு அதனை வழங்கவில்லை தமிழகத்தில் உள்ள எடப்பாடி அரசு அதைக் கேட்கவில்லை. தமிழகத்திற்கு புயல் நிவாரண நிதியாக 40,000 கோடி கேட்கப்பட்டது ஆனால் மோடி ஆயிரம் கோடி மட்டுமே தருவதாக அறிவித்தார்.

ஆனால் மோடிக்காக இரண்டு விமானங்கள் வாங்க பணம் இருக்கின்றது. 10 ஆயிரம் கோடியில் பாராளுமன்ற கட்டிடம் கட்ட மக்களுடைய வரிப் பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களின் நலனுக்காக நிவாரணத் கேட்டால் ஏன் மோடி அரசாங்கம் வழங்கவில்லை.

மோடி அரசாங்கம் மக்களுடைய எல்லா உரிமைகளையும் தமிழகத்தினுடைய உரிமைகளையும் பறித்து விட்டார். கல்வி உரிமையை தமிழகத்தில் இருந்து பறித்து விட்டார். முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்திற்கு வரவில்லை ஆனால் எடப்பாடி முதலமைச்சராக வந்தவுடன் நீட் தேர்வு தமிழகத்தில் கொண்டு வந்தார்கள்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணம் ரத்து செய்யப்படும்.

பாஜக அரசு தற்போது புதிய கல்விக் கொள்கை ஒன்றை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் இனிவரும் காலங்களில் செவிலியர் தேர்வு மற்றும் வழக்கறிஞர் தேர்வு ஆகிய படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்றாம் வகுப்பு ஐந்தாம் வகுப்பு ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதையெல்லாம் தமிழகத்தில் தட்டிக் கேட்க வேண்டிய பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தட்டிக் கேட்காமல் தலையாட்டி பொம்மைகளாக உள்ளனர். அதிமுகவினர் யாராவது தங்களிடம் வந்து ஒட்டு கேட்டால் ஜெயலலிதா எப்படி இறந்தார் என அவர்களிடம் கேளுங்கள் என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Updated On: 16 March 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  2. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
  4. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  5. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  7. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  9. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  10. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு