மது பாட்டில் கடன்கேட்டு தர மறுத்த விற்பனையாளருக்கு கொலை மிரட்டல் : 2 பேர் கைது

கலவை அருகே மதுபாட்டில் கடன் கேட்டு தர மறுத்த டாஸ்மார்க் விற்பனையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2பேரை போலீஸார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo

கலவை அருகே மதுபாட்டில் கடன் கேட்டு தர மறுத்த டாஸ்மார்க் விற்பனையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2பேரை போலீஸார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள மேல்நேத்தப்பாக்கம் பகுதியில் டாஸ்மார்க் கடை இயங்கி வருகிறது. அதில் ,தினகரன் என்பவர், விற்பனையாளராக பணியாற்றி வருகிறார் . இந்நிலையில் 2 பேர் கடைக்கு வந்து, இருவரும் தினசரி இந்த மதுபான கடைக்கு தான் வந்து மது பாட்டில் வாங்கி குடித்து வருவதாகவும், ஆகையால், எங்களுக்கு மதுபாட்டில் கடனாக வேண்டும் என கேட்டுள்ளனர்.

ஆனால், விற்பனையாளர் கடன் தரமறுத்து, பணம் கொடுத்தால் மட்டுமே மது பாட்டில் வழங்க முடியும் என்று கூறியுள்ளார் .உடனே இருவரும் வெளியில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து, விற்பனையாளரிடம் வீட்டிற்கு போக வெளியில் வரும்போது பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

மேலும்,அவர்கள் விற்பனை செய்ய விடாமல் ஒரு மணி நேரமாக தகராறில் ஈடுபட்டனர். விற்பனையாளர் தினகரன். கலவை போலீஸாருக்கு தகவல் அளித்தார். உடனே அங்கு வந்த எஸ்ஐ சரவணமூர்த்தி மற்றும் போலீசார் தகராறு செய்த இருவரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில் அவர்கள் கலவை அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார்(22).மற்றொருவர் மேல்நிலை கிராமத்தைச் சேர்ந்த சரவணன்(22) என தெரியவந்தது. இதனையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிந்து போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 9 July 2021 4:05 AM GMT

Related News