/* */

ஆற்காட்டிலிருந்து திருப்பதிக்கு திருமங்கையாழ்வார் குழு பாதயாத்திரை

ஆற்காடு திருமங்கையாழ்வார் பக்தர்கள் குழுவினர் 1500 பேர் திருப்பதிக்கு பிரம்மோற்சவத்திற்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

HIGHLIGHTS

ஆற்காட்டிலிருந்து திருப்பதிக்கு திருமங்கையாழ்வார் குழு பாதயாத்திரை
X

ஆற்காடு திருமங்கையாழ்வார் பக்தர்கள் குழுவினர் 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பாலாற்றங்கரையில் உள்ள புகழ்பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலிலிருந்து ஆண்டுதோறும் திருமங்கையாழ்வார் பக்தர்கள் பாதயாத்திரைக் குழுவினர் புரட்டாசியில் திருமலையில் நடக்கும் பிரம்மோற்சவத்தில் திருப்பதிக்கு பாதயாத்திரை செல்வது வழக்கமாகும். .

கடந்த ஆண்டில் கொரோனா தொற்றால் திருப்பதி கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடைசெய்யப்பட்டது. அதன் காரணமாக நின்று போன பாதயாத்திரை, இந்த ஆண்டு ஆன்லைனில் பதிவு செய்து சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, கொரோனா பரிசோதனைக்கு பின்பு பெறப்படும் நெகட்டிவ் சான்று மற்றும் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான ஆதார் பதிவுகளை வைத்து ஆன்லைன் மூலமாக சாமி தரிசனத்திற்கு டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது

.அதன் அடிப்படையில் ஆன்லைன் டிக்கெட்டுகளைப் பெற்ற 1500க்கும் அதிகமான திருமங்கையாழ்வார் பக்தர்கள் குழுவினர் திருப்பதிக்கு பாதயாத்திரையை துவங்கினர்.

பாதயாத்திரையில் பக்தர்கள், கோவிந்தா! கோவிந்தா ! என்று முழங்கியவாறும் பஜனைப் பாடல்களை ஆட்டத்துடன் பாடி பக்தி பரவசத்துடன் சென்றனர்.

Updated On: 9 Oct 2021 8:19 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?