Begin typing your search above and press return to search.
கலவை அருகே தடுப்பூசி பற்றாக்குறையால் திருப்பி அனுப்பப்பட்ட பொதுமக்கள்
கலவை அடுத்த வாழைப்பந்தலில் நடந்த தடுப்பூசி முகாமில் தடுப்பூசி இருப்பு இல்லாததால் 174 பேருக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டது
HIGHLIGHTS

கலவை அடுத்த வாழைப்பந்தலில் நடந்த தடுப்பூசி முகாம்
கலவை வருவாய்த்துறை சார்பில் வாழைப்பந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. திமிரி வட்டார அரசு மற்றும் மாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் தடுப்பூசி போட்டனர் 18 - 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முதல் தடுப்பூசியும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி போட்டனர்.
முகாமை கலவை தாசில்தார் நடராஜன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் மருத்துவக் குழுவினரிடம் தடுப்பூசி எவ்வளவு இருப்பு உள்ளது எனவும் கேட்டறிந்தார். இதில் 174 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி இல்லாததால் வரிசையில் நின்று இருந்த அனைவரையும் நாளை செலுத்திக் கொள்ள வருமாறு கூறியதால் அனைவரும் திரும்பி சென்றனர்.