ஆற்காட்டில் பதுக்கி வைத்திருந்த டாஸ்மாக் மதுபாட்டில்கள் பறிமுதல்

ஆற்காட்டில் கள்ளத்தனமாக வீட்டில் பதுக்கி வைத்து விற்க முயன்ற டாஸ்மாக் மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆற்காட்டில் பதுக்கி வைத்திருந்த டாஸ்மாக் மதுபாட்டில்கள் பறிமுதல்
X

ஆற்காட்டில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த டாஸ்மாக் மதுபாட்டில்கள் 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தோப்புக்கானா பகுதி மேட்டுத்தெருவைச் சேர்ந்த சுபாஷ்(28) வீட்டில் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து கள்ளத்தனமாக விற்பனை செய்வதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி, கலால் துணை ஆணையாளர் மற்றும் ஆற்காடு டவுன் சப் இன்ஸ்பெக்டர் மகாராஜா ஆகியோர் மேட்டுத் தெருச் சென்றனர் . அப்போது அங்கிருந்த சுபாஷ்,போலீஸைப் பார்த்ததும் தப்பி ஓடிவிட்டார்.

இருப்பினும், அதிகாரிகள் மற்றும் போலீஸார் சுபாஷ் வீட்டை சோதனையிட்டனர். அதில் சுபாஷ் பதுக்கி வைத்திருந்த 30000 மதிப்புள்ள டாஸ்மாக் சரக்குகளை பறிமுதல் செய்தனர்.

பின்னர் , வருவாய் துறையினர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து சுபாஷைத் தேடி வருகின்றனர்.

Updated On: 11 July 2021 3:00 PM GMT

Related News