Begin typing your search above and press return to search.
கலவை அருகே பார்வையற்ற குடும்பத்திற்கு உதவிய பள்ளிச்சிறுவன்
கலவையடுத்த வாழைப்பந்தலில் 10ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் அங்குள்ள பார்வையற்ற குடும்பத்திற்கு அரிசி,மளிகைப்பொருட்களை வழங்கி உதவி
HIGHLIGHTS

கலவை அருகே பார்வையற்ற குடும்பத்திற்கு உதவிய பள்ளிச்சிறுவன்
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையடுத்த வாழைப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் K. வசந்தகுமார் என்ற பத்தாம் வகுப்பு மாணவன். அவ்வூரில் இயங்கி வரும் "நம்மாழ்வார் இயற்கை குழு" என்ற பெயரில் இயங்கி வரும் தன்னார்வ இயற்கை வேளாண் ஆதரவு மற்றும் பசுமைப் பாதுகாப்பு இயக்கத்தில் சேர்ந்து மரக்கன்றுகளை நடுதல் மற்றும் பேணுதல் போன்ற பணிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் அவ்வூரில் கொரோனா ஊரடங்கு காரணமாக வறுமையில் வசித்து வரும் பார்வையற்ற குடுப்பத்தினருக்கு வசந்த குமார் தான் சேமித்து வைத்திருந்த ₹1375ல் அரிசி, மளிகைப் பொருட்களை வாங்கித் தந்து உதவினார்.
மேலும் அவ்வூர் தூய்மைப்பணியாளர்களுக்கு உணவு தயாரித்து வழங்கினார். சிறுவன் வசந்தகுமாரின் செயலைக்கண்டு வாழைப்பந்தல் கிராமத்தினர் பாராட்டி வாழ்த்தினர்.