Begin typing your search above and press return to search.
விஷாரம் பகுதியில் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
ராணிப்பேட்டை மாவட்டம் விஷாரம் பகுதியில் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு செய்தார்
HIGHLIGHTS

ராணிப்பேட்டை மாவட்டம் விஷாரம் பகுதியில் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு செய்தார்
விஷாரம் அருகே அருங்குன்றம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார மையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருவதை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
இதில் 18 முதல் 44 வயது உடைய நபர்களுக்கு இதுவரை 374 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அருங்குன்றம் கிராமத்தில் கிராம அளவிலான கொரோனா சிறப்பு குழு செயல்பாடு குறித்தும் முகக்கவசத்தின் அவசியத்தையும் பொதுமக்கள் சமூக இடைவெளி பற்றியும் தடுப்பூசி போடுவதன் பயன்பாடுகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் எடுத்துரைத்து பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இதில் வாலாஜா வட்டாட்சியர் ஜெயபிரகாஷ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.