வைக்கோல்போரில் பதுக்கி வைத்திருந்த 14 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கலவையருகே செய்யாத்து வண்ணத்தில் வைக்கோல் போரில் பதுக்கி வைத்திருந்த 14ஆயிரம்லிட்டர் எரிசாராயத்தை போலீஸார்பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
வைக்கோல்போரில் பதுக்கி வைத்திருந்த 14 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
X

வைக்கோல்போரில் பதுக்கி வைத்திருந்த  எரிசாராயம் 

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வேகமாக வந்த மினி லோடு வேனை சந்தேகித்த போலீசார் மடக்கினர். அதில், டிரைவர் உட்பட இருவர் தப்பிச்சென்றனர்.. இருப்பினும் வேனை சோதனையிட்டதில் 35லிட்டர் கொள்ளளவு கொண்ட100கேன்களில்3ஆயிரத்து 500லிட்டர் சாராயம் கடத்திச்செல்வது கண்டறியப்பட்டு அவற்றைக் கலவைப்போலீஸார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர் .

பின்னர், அவை இராணிப்பேட்டைகலால் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, கலால்போலீஸார் விசாரணை செய்து வரும் நிலையில் கலவை அடுத்த செய்யாத்துவண்ணம் கிராமத்தில் வீட்டுமனைகள் போடப்பட்டிருந்த இடத்தில் உள்ள பெரிய வைக்கோல் போருக்குள் எரிசாராயம் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

இதையடுத்து இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையில் அங்கு சென்ற போலீசார் வைக்கோல் போரில் சோதனையிட்டனர் .

அதில் மறைத்து வைத்திருந்த 35 லிட்டர் கொள்ளவுள்ள கொண்ட சுமார் 397 கேன்களில் இருந்த 13895 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், அவற்றை வாலாஜாப்பேட்டையில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து எரிசாராயம் பதுக்கி வைத்திருந்த வீட்டுமனை யாருடையது என்பதை பற்றியும் பெருமளவில் எரிசாரயத்தை பதுக்கி வைத்தவர்கள் யார் என்பது குறித்து கலால்போலீஸார் மற்றும்தனிப்பிரிவு உள்ளிட்டோர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வைக்கோல்போரில் பெருமளவில் எரிசாராய்ம் பதுக்கி வைத்திருந்த சம்பவ அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 8 Aug 2021 4:24 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவள்ளூர்
    பூட்டி கிடக்கும் நூலக கட்டடத்தை மீண்டும் திறக்க கிராம மக்கள்
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் பாரம்பரிய பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் வேளாண்...
  4. கும்மிடிப்பூண்டி
    பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட கோரிக்கை
  5. நாமக்கல்
    நாமக்கல் அருகே சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்கூடத்தில் தீ விபத்து
  6. திருவண்ணாமலை
    கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில், இன்றைய காய்கறி விலை
  8. திருவண்ணாமலை
    நிதி நிறுவன மேலாளர் காரில் கடத்தல்; கொள்ளையர் மூன்று பேர் கைது
  9. நாமக்கல்
    மோகனூர் அருகே ரூ. 29.20 லட்சம் மதிப்பில் ரிங் ரோடு அமைக்கும் பணி...
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை