Begin typing your search above and press return to search.
ஆற்காட்டில் பைக் திருடியவனுக்கு போலீஸ் வலை
ஆற்காட்டில் இரவு வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த பல்சரை திருடும் போது சிசிடிவியில் சிக்கிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்
HIGHLIGHTS

சிசிடிவியில் சிக்கிய பைக் திருடன் உருவம்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஆசாத் தெருவைச்சேர்ந்த விஜயன். இவர் அதே பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார். அவருக்கு சொந்தமான பல்சர் பைக்கை வீட்டிற்கு வெளியே நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார்.
பின்பு ,வெளியில் வந்து பார்த்த போது பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே பக்கத்து வீட்டில் பொருத்தி உள்ள சிசிடிவி கேமராவில் பதிவுகளை ஆய்வு செய்தார். அதில் அடையாளம் தெரியாத ஒருவர் பல்சரைத் திருடிச் செல்வதைக்கண்டார்..
இது தொடர்பாக விஜயன் ஆற்காடு டவுன் போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் சிசிடிவி பதிவினை வைத்து திருடிச்சென்ற மர்மநபரைத்தேடிவருகின்றனர்.