Begin typing your search above and press return to search.
ஆற்காட்டில் பிரபல டிவி ஷோரூமுக்கு அபராதம்
ஆற்காட்டில் கொரோனா விதிமீறி இயங்கிய பிரபல டிவி ஷோரூமிற்கு வட்டாட்சியர் அபராதம் விதித்தார்.
HIGHLIGHTS

ஆற்காட்டில் கொரோனா விதிமீறி இயங்கிய பிரபல டிவி ஷோரூமிற்கு வட்டாட்சியர் அபராதம் விதித்தார். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பைபாசில் இயங்கி வரும் பிரபலமான டிவி ஷோரூம் அரசு அறிவித்த தளர்வு விதிமீறி , குளிர் சாதன வசதிகளுடன் கதவுகள் மூடிய நிலையில் செயல்பட்டது. ஊழியர்களில் பெரும்பாலானோர் கொரோனா தடுப்பு விதிகளை மீறி, முக கவசம், மற்றும் சமூக இடைவெளியின்றி, விற்பனையை செய்து வருவதாக, ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சிக்கு தெரியவந்தது. இதனையடுத்து அங்கு வந்த அவர் விதிகளை மீறி செயல் பட்டு வந்த அந்த ஷோரூமிற்கு, ₹ 5700ஐ அபராதமாக விதித்தார்.
இதனையறிந்த பொது மக்கள் அரசியல்பின்பலத்துடன் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இயங்கி வரும் பிரபலமான ஷோரூம் விதிகளைமீறி, இயங்கி வருவதைக்தை ககண்டு வட்டாட்சியர் அபரதம் விதித்ததை பாரட்டி வருகின்றனர்.