மினிவேனில் 3500 லிட்டர் எரிசாராயம் கடத்தல்: டிரைவர் தப்பியோட்டம்

கலவையில் வாகன சோதனையின்போது வேனில் கடத்திய 3 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மினிவேனில் 3500 லிட்டர் எரிசாராயம் கடத்தல்: டிரைவர் தப்பியோட்டம்
X

வேனில் கடத்திய 3 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை சுற்றுவட்டார பகுதியில் கலவை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கலவை அடுத்த சென்னசமுத்திரம் சிருவிடாகம் பகுதியில் அதிவேகமாக லோடு வேன் ஒன்று வருவதைக் கண்டு போலீசார் மடக்கினர். போலீசாரை கண்டதும்,வேன் ஓட்டுநர் உட்பட இருவர் வேனிலிருந்து இறங்கி தப்பி ஓடினர் .

இதனையடுத்து, போலீஸார், வேனை சோதனை செய்தனர். அதில், 100கேன்களில் 35 லிட்டர் அளவிற்கு மொத்தம் 3500 லிட்டர் எரிசாராயம் கடத்திச் செல்வது தெரியவந்தது. உடனே போலீஸார் எரிசாராயம் உள்ள கேன்களையும் வேனையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கலவை போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடியவர்கள் குறித்தும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் குறித்தும் விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில்,மாவட்ட கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்பேரில் வழக்கை சிபிஐ கலால் பிரிவு மாற்றம் செய்தனர். அதனைத்தொடர்ந்து, கலால் போலீஸார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்

Updated On: 6 Aug 2021 12:19 PM GMT

Related News

Latest News

 1. சேலம் மாநகர்
  தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
 2. மேலூர்
  மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
 3. குமாரபாளையம்
  தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
 4. திருச்சிராப்பள்ளி மாநகர்
  பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு
 5. கல்வி
  JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்...
 6. சோழவந்தான்
  மதுரை அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் கலாசார பயிலரங்கம்
 7. உலகம்
  ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளக்க போகிறது: இது உலகின் அதிசய நிகழ்வு
 8. கோவில்பட்டி
  கோவில்பட்டி அருகே கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம்
 9. திருச்செந்தூர்
  மக்களின் நம்பிக்கை காப்பாற்றப்படும்.. தூத்துக்குடி ஆட்சியர் பேச்சு…
 10. மேலூர்
  மதுரை அருகே ஆலத்தூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்