கலவையருகே மது பாட்டில் விற்றவர் கைது

கலவையடுத்த அரும்பாக்கத்தில் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்றவரை போலீஸார் கைது செய்தனர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கலவையருகே மது பாட்டில் விற்றவர் கைது
X

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவர் தற்போது டாஸ்மாக் மது கடை மூடப்பட்டுள்ளதை வாய்ப்பாக்கி கள்ளத்தனமாக மதுபாட்டில்களை வீட்டின் பின்புறத்தில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக கலவைப் போலீஸாருக்கு ரகசியத் தகவல்கிடைத்தது.

அதன் பேரில் அங்கு சென்ற போலீஸார் கோவிந்தன் வீட்டை சோதனையிட்டனர் . அதில் பதுக்கி வைத்திருந்த 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து கோவிந்தனை கைது செய்தனர்.


அதே போல காவேரிப்பாக்கம், அடுத்த ஓச்சேரி அருகே காவேரிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மஹாலஷ்மி மற்றும்போலீஸார் ரோந்து சென்றனர்.அப்போது உத்திரம்பட்டு குறுக்கு தெருவில் வசித்து வரும் மணிவண்ணன் ,49 என்பவர் கடந்த சில தினங்களாக அங்குள்ள சுடுகாடு அருகே ஓடையில் யாருக்கும் தெரியாமல் ஊறல் போட்டு சாராயம் காய்ச்சி விற்று வருவது போலீஸாருக்குத் தெரியவந்தது, அதனைத்தொடர்ந்து போலீஸார் அங்கு சென்ற போது சாராயம் விற்றுக் கொண்டிருந்த மணிவண்ணன் கையும் களவுமாக பிடித்த போலீஸார், கைது செய்து சிறையிலடைத்தனர்.

Updated On: 2021-06-13T21:39:37+05:30

Related News

Latest News

 1. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 2. திருவள்ளூர்
  பூட்டி கிடக்கும் நூலக கட்டடத்தை மீண்டும் திறக்க கிராம மக்கள்
 3. நாமக்கல்
  நாமக்கல்லில் பாரம்பரிய பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் வேளாண்...
 4. கும்மிடிப்பூண்டி
  பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட கோரிக்கை
 5. நாமக்கல்
  நாமக்கல் அருகே சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்கூடத்தில் தீ விபத்து
 6. திருவண்ணாமலை
  கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க...
 7. பாளையங்கோட்டை
  நெல்லை மாவட்டத்தில், இன்றைய காய்கறி விலை
 8. திருவண்ணாமலை
  நிதி நிறுவன மேலாளர் காரில் கடத்தல்; கொள்ளையர் மூன்று பேர் கைது
 9. நாமக்கல்
  மோகனூர் அருகே ரூ. 29.20 லட்சம் மதிப்பில் ரிங் ரோடு அமைக்கும் பணி...
 10. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை