இரும்பு வியாபாரி வீட்டில் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு துறையினர் சோதனை

திமிரி அருகே கோடிக்கணக்கில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக இரும்பு வியாபாரியிடம் 30 பேர் கொண்ட குழு 6 இடங்களில் சோதனை

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
இரும்பு வியாபாரி வீட்டில் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு துறையினர் சோதனை
X

திமிரி பகுதியில் உள்ள இரும்பு வியாபாரி வீட்டில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்

ஆற்காடு அடுத்த திமிரி அருகே கோடிக்கணக்கில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக இரும்பு வியாபாரியிடம் ஜிஎஸ்டி வரிஏய்ப்பு அமலாக்கத்துறை அதிகாரிகள் 30 பேர் கொண்ட குழு 6 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில்பல கோடி மதிப்பிலான ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு ஆவணங்கள் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தகவல்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ்(56) இவர் அதே பகுதியில் 25 ஆண்டு காலமாக பழைய இரும்புகளை பெற்று விற்பனை செய்யும் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்

இந்நிலையில் அவர் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாக சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு அமலாக்க துறைக்கு ரகசிய தகவல் வந்ததையடுத்து உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட 30 பேர் கொண்ட குழு ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பகுதியில் உள்ள அவரது வீடு ,கடைகள் மற்றும் வேலூர் திருப்பத்தூர் மாவட்டத்தில் குடியாத்தம், பேரணாம்பட்டு, திருப்பத்தூர் உள்ளிட்ட உள்ள தங்கராஜுக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய ஆறு இடங்களில் ஒரே சமயத்தில் சோதனையில் ஈடுபட்டனர் இன்று காலை 11 மணி அளவில் தொடங்கிய சோதனை மாலை ஆறு முப்பது மணி வரை நீடித்தது.

இந்த சோதனையில் ஜிஎஸ்டி வரிஏய்ப்பு சம்பந்தமான ஆவணங்கள் சிக்கி உள்ளதாகவும் வரிஏய்ப்பு கோடிகளில் இருக்கும் எனவும் மேலும் விசாரணை முடிவில் தங்கராஜ் கைது செய்யப்படுவார் எனவும் தெரிவித்தனர்.

ஜிஎஸ்டி தொடர்பான வரிஏய்ப்பு சோதனைகள் பார்க்க சாதாரணமாக இருப்பது போல் தெரியும் ஆனால் விசாரணை முடிவில் வரிஏய்ப்பு என்பது பல கோடியில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 17 Aug 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கருப்பு ஆர்ப்பாட்டத்தில் திரிணாமுலின் ஆச்சரிய நுழைவு: காங்கிரஸ்...
  2. திருவள்ளூர்
    ராகுல் காந்தி எம்.பி .தகுதி நீக்கம் கண்டித்து காங்கிரசார் போராட்டம்
  3. கும்மிடிப்பூண்டி
    ஐ.நா. சபையில் ஒலித்தது கும்மிடிப்பூண்டி சமூக ஆர்வலரின் குரல்
  4. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த அலுவலர்கள் குழு ஆய்வு
  5. சினிமா
    பல மில்லியன் வியூஸ்கள் பெறுவது எப்படி? இதோ ரீல்ஸ் ஐடியாக்கள்!
  6. பூந்தமல்லி
    இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: பழுதடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம்...
  7. இந்தியா
    ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கி விடுமுறை: முழு விபரம்
  8. கோவில்பட்டி
    கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன்...
  9. கும்மிடிப்பூண்டி
    பக்தர்கள் வசதிக்காக கட்டப்பட்ட குளியல் கழிவறை கட்டடத்தை சீர் செய்ய...
  10. டாக்டர் சார்
    பெருஞ்சீரகத்தில் கலப்படம்: கண்டறிவது எப்படி? உணவு பாதுகாப்பு அலுவலரின்...