கலவையில் மர்மமான முறையில் மரணமடைந்த மாற்றுத்திறனாளி
கலவையடுத்த டி.புதுரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கழுத்தறுந்து பிணமாக இருந்தது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
HIGHLIGHTS

இராணிப்பேட்டை மாவட்டம் கலவையடுத்த டி புதூரைச்சேர்ந்தவர் குமார் (46), மாற்றுத்திறனாளியான இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி சுமதி (38) சென்னை கோயம்பேட்டில் வசித்து வருகிறார். குமார் இரண்டாவது மனைவி ரேகா (38) என்பவருடன் டி.புதூரில் வசித்து வந்தார்.
குமார்.,ரேகா தம்பதியனருக்கு சுரேஷ் (14), சந்தோஷ் (15), ராஜேஷ் (14), ஈஸ்வரி (12) ஆகிய நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில் குமார், காலை மது அருந்த அகரம் கிராமத்தில் மது பாட்டில்களை வாங்கி அங்குள்ள ஏரிக்கரைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அவ்வழியாக வந்த சிலர் குமார் கழுத்து அறுக்கப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கலவைப் போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் குமாரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்