கலவை கஜேந்திர வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் கோரிக்கை

கலவையை அடுத்த வாழைப்பந்தல் கஜேந்திர வரதராஜபெருமாள் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கலவை கஜேந்திர வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் கோரிக்கை
X

வாழைப்பந்தல் கஜேந்திர வரதராஜபெருமாள் கோவில் 

கலவையை அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தின் மத்தியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருந்தேவி சமேத கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 1975-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.

கோவிலுக்கு சொந்தமாக 12 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தைக் குத்தகைக்கு விட்டு அதில் இருந்து பல லட்சம் ரூபாயை வசூல் செய்து வைத்துள்ளனர். கோவிலை பராமரிக்க வேண்டும் எனப் பக்தர்களும், பொதுமக்களும் சம்பந்தப்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தினர். ஆனால் கோவிலை பராமரிக்க யாரும் முன்வரவில்லை.

கோவிலின் ராஜகோபுரத்தில் ஏராளமான மரம், செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. கோவிலை சுற்றி முட்புதர்கள் உள்ளது. அதில் இருக்கும் விஷ உயிரினங்கள் கோவிலுக்குள் வலம் வருகின்றன. கோவிலை சுற்றி இருக்கும் சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அச்சப்படுகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அரசு அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ராஜகோபுரத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி, கோவிலை புதுப்பித்து, வர்ணம் பூசி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என ஊர் பொதுமக்களும், பக்தர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 14 Jun 2021 5:10 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    ராகுல் காந்தி எம்.பி .தகுதி நீக்கம் கண்டித்து காங்கிரசார் போராட்டம்
  2. கும்மிடிப்பூண்டி
    ஐ.நா. சபையில் ஒலித்தது கும்மிடிப்பூண்டி சமூக ஆர்வலரின் குரல்
  3. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த அலுவலர்கள் குழு ஆய்வு
  4. சினிமா
    பல மில்லியன் வியூஸ்கள் பெறுவது எப்படி? இதோ ரீல்ஸ் ஐடியாக்கள்!
  5. பூந்தமல்லி
    இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: பழுதடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம்...
  6. இந்தியா
    ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கி விடுமுறை: முழு விபரம்
  7. கோவில்பட்டி
    கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன்...
  8. கும்மிடிப்பூண்டி
    பக்தர்கள் வசதிக்காக கட்டப்பட்ட குளியல் கழிவறை கட்டடத்தை சீர் செய்ய...
  9. டாக்டர் சார்
    பெருஞ்சீரகத்தில் கலப்படம்: கண்டறிவது எப்படி? உணவு பாதுகாப்பு அலுவலரின்...
  10. விளாத்திகுளம்
    விளாத்திகுளம் அருகே சூறைக்காற்று: 700க்கும் மேற்பட்ட வாழை மரங்கள்...