/* */

நடமாடும் கொரோனா தடுப்பூசி போடும் பணி: கலெக்டர் ஆய்வு

ஆற்காடு பெரிய அசேன் புரா பகுதியில் நடமாடும் வாகனத்தின் மூலம் தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் பாஸ்கரப்பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

நடமாடும் கொரோனா தடுப்பூசி போடும் பணி: கலெக்டர் ஆய்வு
X

நடமாடும் தடுப்பூசி திட்டத்தை ஆய்வு செய்த கலெக்டர் பாஸ்கரபாண்டியன்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்த கலெக்டர் பாஸ்கரபாண்டியன் உத்தரவைத் தொடர்ந்து சுகாதாரத் துறையை சார்பில் நடமாடும் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டது.

மருத்துவர், செவிலியர் , மருத்துவப்பணியாளர் மற்றும் உதவியாளர் கொண்ட ஒரு குழுவினருக்கு ஒரு வாகனம் என்ற அடிப்படையில் நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் உள்ள மக்களின் இருப்பிடங்களுக்கேச் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களைக் கண்டறிந்து கொரோனா தடுப்பூசி போடும் பணி மாவட்டம் முழுவதும் 42 வாகனங்கள் மூலம் நடந்து வருகிறது.

இத்திட்டத்தில் ஆற்காடு வட்டாரத்தில் 5நடமாடும் தடுப்பூசி போடும் வாகனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் ஆற்காடு பெரிய அசேன்புரா பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த நடமாடும் தடுப்பூசி போடும் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ்பாபுராஜ், சுகாதார மேற்பார்வையாளர் ரவி ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் புதுப்பாடி, கரிக்கந்தாங்கல், ஆகிய பகுதிகளில் இருந்த வாகனங்களையும் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார்.

Updated On: 1 Oct 2021 5:52 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?