கலவை அருகே கனமழை காரணமாக 300 ஏக்கர் நெற்பயிர் தண்ணீர்ல் மூழ்கியது

கலவையருகே கனமழை காரணமாக அறுவடைக்கு தயாரான 300 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி நாசமானதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கலவை அருகே கனமழை காரணமாக 300 ஏக்கர் நெற்பயிர் தண்ணீர்ல் மூழ்கியது
X

கலவை அருகே கனமழை காரணமாக 300 ஏக்கர் நெற்பயிர் தண்ணீர்ல் மூழ்கியது

இராணிப்பேட்டை மாவட்டம், கலவையைச் சுற்றியுள்ள சொரையூர்,மாம்பாக்கம் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள், சுமார.15000 ஏக்கருக்கும்மேற்பட்ட விவசாய நிலங்களில் வேர்க்கடலை, தானியங்கள், காய்கறிகள் மற்றும் நெற்பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர் .

அவற்றில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் 2நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. அதில் மாம்பாக்கம் , சொரையூர், தோனிமேடு, பொன்னகங்கலம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் விளைவித்த நெற்பயிர்கள் மழைநீரில் அழுகியும் சேற்றில் அழுந்தி முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. அதனைக்கண்ட விவசாயிகள், பெரும் வேதனையடைந்து உள்ளனர்.

மேலும், விவசாயிகளின் நஷ்டத்தை ஈடு செய்ய மாவட்ட வேளாண் அதிகாரிகள் பாதிப்புகளை பார்வையிட்டு, கணக்கீடு செய்து இழப்பீடு வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்..

Updated On: 11 July 2021 8:37 AM GMT

Related News