/* */

மதுபாட்டில் கடன் தர மறுத்த விற்பனையாளருக்கு கொலை மிரட்டல்

டாஸ்மாக் கடையில் மது பாட்டில் கடன்கேட்டு தர மறுத்த விற்பனையாளருக்கு கொலை மிரட்டல்.

HIGHLIGHTS

மதுபாட்டில் கடன் தர மறுத்த விற்பனையாளருக்கு கொலை மிரட்டல்
X

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள மேல்நேத்தப்பாக்கம் டாஸ்மார்க் கடை இயங்கி வருகிறது. அதில் தினகரன் என்பவர், விற்பனையாளராக பணியாற்றி வருகிறார் . இந்நிலையில் இருவர் கடைக்கு வந்து, தினசரி அந்த மதுபான கடைக்கு தான் வந்து மது பாட்டில் வாங்கி குடித்து வருவதாகவும், ஆகையால், அவர்களுக்கு மதுபாட்டில் கடனாக வேண்டும் என கேட்டுள்ளனர்.

ஆனால், விற்பனையாளர் கடன் தரமறுத்து, பணம் கொடுத்தால் மட்டுமே மது பாட்டில் வழங்க முடியும் என்று கூறியுள்ளார் . உடனே இருவரும் வெளியில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து, விற்பனையாளரிடம் வீட்டிற்கு போக வெளியில் வரும்போது பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும்,அவர்கள் விற்பனை செய்ய விடாமல் ஒரு மணி நேரமாக தகராறில் ஈடுபட்டனர். அதனால் விற்பனையாளர் தினகரன் கலவை போலீஸாருக்கு தகவல் அளித்தார்.

உடனே அங்கு வந்த எஸ்ஐ சரவணமூர்த்தி.மற்றும் போலீசார் தகராறு செய்த இருவரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில் அவர்கள் கலவை அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார், மற்றொருவர் மேல்நிலை கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என தெரியவந்தது. இதனையடுத்து . இருவர் மீதும் வழக்குப்பதிந்து போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 9 July 2021 4:01 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  2. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  3. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  4. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  7. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  8. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  10. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!