கலவை தாலுகாவில் நலத்திட்ட உதவிகள்
கலவை தாலுகா அலுவலகத்தில் ₹1036450 , மதிப்பில் நலதிட்ட உதவிகளை,ஆற்காடு எம் எல்ஏ ஈஸ்வரப்பன் வழங்கினார்.
HIGHLIGHTS

கலவைத் தாலுகா அலுவலகத்தில் ₹1036450 , மதிப்பில் நலதிட்ட உதவிகளை,ஆற்காடு எம் எல்ஏ ஈஸ்வரப்பன் வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு துணைஆட்சியர் தாரகேஸ்வரி தலைமையில்1430 வரைவாண்டுக்கான ஜமாபந்தி கடந்த 1ந்தேதி தொடங்கியது. இன்று ஜமாபந்தி நிறைவுற்றது.
பின்பு நடந்த நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், துணை ஆட்சியர் தாரகேஸ்வரி தலைமைத்தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா 10 பேருக்கும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை 10 பேருக்கும், வேளாண்மை துறையின் கீழ் விவசாய பொருட்கள் 10 பேருக்கும், 6 உட்பிரிவு செய்து பட்டாவும் வழங்கப்பட்டது 6 வாரிசு சான்றுகள் என ரூ.10,36,450. மதிப்பிற்கு நலத்திட்டங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில், கலவை தாசில்தார் நடராஜன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கோபாலகிருஷ்ணன், துணை வட்டாட்சியர்கள் தக்ஷிணாமூர்த்தி, பாஸ்கரன். வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணி . விஏஓ ஸ்ரீதர் மற்றும் கிராம உதவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.