ராணிப்பேட்டை: வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தொடங்கியது

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ராணிப்பேட்டை: வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தொடங்கியது
X

வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு பதிவானது நடைபெற உள்ளது. இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் குழுவினரால் 4 சட்டமன்ற தொகுதிகளில் 1447 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்கு பதிவினை செய்வதற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களான கட்டுப்பாட்டு கருவி 1904, வாக்குச்சீட்டு கருவி 2025, யாருக்கு வாக்களித்தோம் என கண்டறியும் கருவி 2521 என்ற எண்ணிக்கையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பல்வேறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, வாக்கு பதிவிற்காக தயார் நிலையில் ஆற்காடு ஒழுங்குமுறை விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டு உள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று ஆற்காடு ஒழுங்குமுறை விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் அறையின் சீலினை மாவட்ட ஆட்சித் தலைவரும் தேர்தல் அலுவலருமான கிளாஸ்டன் புஷ்பராஜ், அனைத்துக்கட்சி முகவர்கள் முன்னிலையில் திறந்தார். மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனித்தனியாக கணினி முறை குலுக்கலின் அடிப்படையில் பிரித்து அனுப்பும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் கிளாஸ் புஷ்பராஜ் தொடங்கி வைத்தார்.

மேலும் இதனைத் தொடர்ந்து 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனியாக கணினி முறை குலுக்கலின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட பின்னர் லாரிகளின் மூலமாக துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புடன் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட உள்ளது.

Updated On: 9 March 2021 10:21 AM GMT

Related News

Latest News

 1. விளையாட்டு
  கிரிக்கெட் கடைசி 1 நாள் போட்டியில் இந்தியா தோல்வி: தொடரை வென்றது...
 2. தஞ்சாவூர்
  உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
 3. தமிழ்நாடு
  காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
 4. திருச்சிராப்பள்ளி மாநகர்
  உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
 5. லைஃப்ஸ்டைல்
  குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
 6. புதுக்கோட்டை
  உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
 7. தேனி
  தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
 8. சேலம் மாநகர்
  தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
 9. மேலூர்
  மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
 10. குமாரபாளையம்
  தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்