இளைஞரை தாக்கிய தனி பிரிவு போலீஸ் மாற்றம் -எஸ்பி சிவகுமார் அதிரடி

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சோகனூரில் டிரைவர் என நினைத்து இளைஞர் ஓருவரைத்தாக்கிய தனிப்பிரிவு போலீஸை காவல்நிலையப் பணிக்கு மாற்றி எஸ்பி உத்தரவு.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
இளைஞரை தாக்கிய தனி பிரிவு போலீஸ் மாற்றம் -எஸ்பி சிவகுமார் அதிரடி
X

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சோகனூரிலிருந்து கடந்த 28-ஆம் தேதி இரவு மொரம்பு மண்ணை லாரியில் கடத்திச் சென்று கொட்டி விட்டு திரும்பி வந்தது குறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அரக்கோணம் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர், அது தொடர்பாக அங்கு விரைந்த அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலைய எஸ் பி தனி பிரிவு ஏட்டு குணசேகரன் இருட்டில் லாரி டிரைவர் என நினைத்து தவறாக தகவல் தந்தவரை அடித்தார்.

தவறாக அடித்ததை உணர்ந்த அவர் உடனே அந்த இளைஞரிடம் மற்றும் அங்கிருந்தவர்களிடமும் தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டார் ஆனால் ஏற்காத அங்கிருந்தவர்கள் காவலர் குணசேகரனை கடுமையாகத் தாக்கினர், இந்நிலையில் தக்கோலம் போலீஸ் நிலையத்திலிருந்து(ஓ.டி) அயல் பணிக்காக அரக்கோணம் தாலுகா எஸ் பி பிரிவில் பணியாற்றி வந்த அவரை , ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி சிவக்குமார் விசாரணை செய்து தற்போது மருத்துவ விடுப்பில் உள்ள ஏட்டு குண சேகரன் அவரது விடுப்பிற்கு பிறகு தக்கோலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார், மேலும் அரக்கோணம் தாலுகா எஸ் பி தனிப்பிரிவுக்கு ராணிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வரும் முதல் நிலை காவலர் சிவக்குமாரை நியமித்து உத்தரவிட்டார்.

Updated On: 1 Jun 2021 6:47 AM GMT

Related News