உடைந்த கால்வாய் சீரமைக்கப்பட்டதால் ஏரிக்கு நீர் வரத்தொடங்கியது

அரக்கோணம் அருகே பரமேஸ்வரமங்கலம் ஏரியின் நீர்வரத்துக் கால்வாய் சீரமைக்கப்பட்டு, தண்ணீர் வருவதால் கிராமமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
உடைந்த கால்வாய் சீரமைக்கப்பட்டதால் ஏரிக்கு நீர் வரத்தொடங்கியது
X

நீர் வரத்து கால்வாய் சீரமைப்பு பணியை பார்வையிடும் நெமிலி ஒன்றிய குழு தலைவர்

இராணிப்பேட்டை மாவட்டத்தின் எல்லையில் உள்ள பொன்னையாற்றில் வெள்ளப் பெருக்கையடுத்து. பாலாறு, மற்றும் கொசஸ்தலை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து,மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகளுக்கு கால்வாய்கள் மூலம் தண்ணீர் திருப்பிவிடப்பட்டுள்ளது. அதில் ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பி வழிந்து உபரிநீர் வெளியேறிக்கொண்டிருக்கிறது..

இந்நிலையில் அரக்கோணம் அடுத்த பரமேஸ்வரமங்கலம் ஏரி, நீர்வரத்தின்றி வறண்டு காணப்பட்டு வந்தது.. இதனால், அதிருப்தியடைந்த கிராமமக்கள், உடனே நெமிலி ஒன்றிய சேர்மேன் வடிவேலுவை சந்தித்து முறையிட்டனர்.

அதன்பேரில், நெமிலி ஒன்றியசேர்மன் வடிவேலு கொசஸ்தலை ஆற்றிலிருந்து பரமேஸ்வரமங்கலம் ஏரிக்கு நீர் செல்லும் கால்வாய் பகுதிகளை நேரில் சென்று ஆய்வுசெய்தார். அப்போது பரமேஸ்வரமங்கலம. ஏரிக்கு வரும் கால்வாய் உடைந்து வேறுபாதையில் நீர் வெளியேறிக் கொண்டிருந்தது. அதனைக்கண்ட ஒன்றியக்குழுத்தலைவர் உடனே நீர் ஆதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததுடன் விரைந்து கால்வாயை சீரமைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

உடனே அதிகாரிகள் அப்பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கி உடைப்பை சரி செய்தனர். இதனையடுத்து பல ஆண்டுகளாக பரமேஸ்வரமங்கலம் ஏரி தண்ணீரின்றி வறண்ட நிலைமாறி ஆற்று நீர் ஏரிக்கு வரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது..

மேலும் ஏரி நிரம்பும்பட்சத்தில் ஆட்டுப்பாக்கம், பரமேஸ்வரமங்களம், சித்தூர் உள்ளிட்ட கிராமங்கள் பயனடையும் வாய்ப்புள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்து நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலுவிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்..

Updated On: 9 Nov 2021 6:14 AM GMT

Related News

Latest News

 1. தேனி
  விவசாயிகள் பெயரில் புரோக்கர்கள் கலெக்டரை குழப்புவதாக அதிகாரிகள்...
 2. தேனி
  தேனி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று
 3. தேனி
  முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையை 30 நாளில் தீர்க்காவிட்டால் போராட்டம்
 4. தேனி
  கடன் தொல்லையால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
 5. தேனி
  சின்னமனூர் முதியவர் இறப்பில் மர்மம் பற்றி ஓடைப்பட்டி போலீஸ் விசாரணை
 6. தேனி
  தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் 70 மாணவ, மாணவிகளுக்கு வேலை
 7. சினிமா
  தீபாவளிக்கு திரைக்கு வரவில்லை நடிகர் அஜித்குமாரின் 'அஜித் 61'..!
 8. சினிமா
  'ஆர்ஆர்ஆர்' படத்தின் அசத்தலான ஆயிரம் கோடி வசூல் சாதனை..!
 9. திருவண்ணாமலை
  சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு: காவல்துறை இணை ஆணையர் ஆய்வு
 10. திருவண்ணாமலை
  வாழ்நாள் சாதனை புரிந்தவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு