காவேரிப்பாக்கத்தில் மணல் கடத்திய மூவர் கைது

காவேரிப்பாக்கம் அருகே மேலபுலம்புதூரில் மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
காவேரிப்பாக்கத்தில் மணல் கடத்திய மூவர் கைது
X

காவேரிப்பாக்கத்தை அடுத்த அவளூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தீபன்சக்ரவர்த்தி மற்றும் போலீசார் மேலபுலம்புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிராம நிர்வாக அலுவலகம் பின்புறமாக இருந்து வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சாக்கு மூட்டையுடன் 3 பேர் வந்தனர். அதனை போலீசார் மடக்கி பிடித்து சோதனையிட்டபோது சாக்கு மூட்டையில் மணல் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவர்கள் மூவரும் பனப்பாக்கம் அருந்ததிபாளையம் பகுதியை சேர்ந்த எழிலரசன் (வயது 20), கணேசன் (24), ரோகித் (21) என்றும் அப்பகுதியில் உள்ள கசக்கால்வாயில் இருந்து கள்ளத்தனமாக மணல் எடுத்து வந்ததும் தெரியவந்தது.

போலீசார் 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து, மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 27 May 2021 5:13 AM GMT

Related News