தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி கழுத்திலிருந்த4 சவரன் செயின் பறிப்பு..!

அரக்கோணத்தில் கதவைத்திறந்து வைத்து தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியின் கழுத்திலிருந்த 4 சவரன் தங்கச்சங்கிலியைப் பறித்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி கழுத்திலிருந்த4 சவரன் செயின் பறிப்பு..!
X
பைல் படம்

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கனேஷ் நகர்,10வது தெருவைச்சேர்ந்தவர், எத்திராஜ்,அவரது மனைவி சுசீலா, இந்த இருவர் மட்டும் வீட்டில் இருந்து வருகின்ற நிலையில் இரவு வீட்டில் ஏற்பட்ட புழுக்கம் காரணமாக சுசீலா வெளிக் கதவைத் திறந்து வைத்து வீட்டின் ஹாலில் தூங்கிக்கொண்டு இருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த மர்ம நபர்கள் திறந்திருந்த வீட்டினுள் நுழைந்து சுசீலா வீட்டினுள் மட்டும் உறங்கிக் கொண்டிருப்பதை உறுதி செய்த அவர்கள், அவரது கழுத்திலிருந்த 4சவரன் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை திருடிச் சென்று விட்டனர் . இந்நிலையில் சுசீலா காலையில் தூங்கி எழுந்து தான் கழுத்தில் அணிந்திருந்த செயின் இல்லாதது கண்ட அதிர்ச்சியில் கூச்சலிட்டார் உடனே அக்கம் பக்கத்தினர் விசாரித்து செயினைத் தேடிப்பார்த்து கிடைக்காமல் போனது இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசாரிடம் சுசீலா புகார் தெரிவித்தார் அதன் பேரில் போலீஸார் செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 16 Jun 2021 11:05 AM GMT

Related News