/* */

மின்சார ரயில் பின்னோக்கி சென்ற விவகாரம்: அதிகாரிகள் இன்று விசாரணை

அரக்கோணத்தில் மின்சார ரயில் பின்னோக்கி சென்றது குறித்து இரயில்நிலையத்திலும் எஞ்சின் டிரைவரிடமும் 10 பேர் கொண்ட குழு விசாரணை

HIGHLIGHTS

மின்சார ரயில் பின்னோக்கி சென்ற விவகாரம்: அதிகாரிகள் இன்று விசாரணை
X

பழுதடைந்த பாண்டாகிராம் கம்பியை ஆய்வு செய்யும் விசாரணை குழு

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சென்னை சென்ரலுக்கு நேற்று மாலை 5:30 மணிக்கு புறப்பட்டு செல்லும் மின்சார ரயில் ஆறாவது பிளாட்பாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மாலை 5:00 மணிக்கு டிரைவர் இல்லாமலேயே இந்த ரயில் பின்னோக்கி சென்றது. இதனையடுத்து மின்சார இணைப்பை துண்டித்து ரயிலை நிறுத்தினர்.

இது குறித்து சென்னை ரயில்வே பொறியாளர்கள் 10 பேர் இன்று விசாரணை நடத்தினர். பின் அவர்கள் கூறியதாவது: அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் மின்சார ரயில்கள் பிளாட்பாரங்களில் சில நிமிடங்கள் நின்று விட்டு சென்று விடும். பணி மாற்றுவதாக இருந்தாலும், பல மணி நேரம் நிறுத்துவதாக இருந்தாலும், இன்ஜின் ஆப் செய்து, பேன்டா கிளிப்பை மின் கம்பியில் இருந்து கீழே இறக்கி விட்டு, கதவை பூட்ட வேண்டும். ரயில் முன்பின் நகராமல் இருக்க சக்கரங்களுக்கிடையே கட்டை வைத்து இன்ஜின் சாவியை ஸ்டேஷன் மாஸ்டரிடம் கொடுத்து விட்டு தான் செல்ல வேண்டும் என்பது விதி.

தானாக ஓடிய ரயிலில் கட்டை வைக்கவில்லை. இந்த ரயில் இரண்டு பக்கத்திலும் இயங்கும். இரு பக்க இன்ஜின் கதவுகளும் திறந்து கிடந்தது. ரயிலின் மீதுள்ள பேண்டா கிராம் கொக்கி மூலம் தான், கம்பத்தில் இருந்து ரயிலை இயக்க மின்சாரத்தை கொண்டு வருகிறது. இந்த கம்பி உடைந்து விட்டது. இதையும் டிரைவர், கார்டு கவனிக்கவில்லை. இதனால் திடிரென அதிக மின்சாரம் பாய்ந்ததால், ஏர் பிரேக் ரிலீஸ் ஆகி ரயில் இன்ஜின் தானாக இயக்கம் பெற்று 300 மீட்டர் பின்னோக்கி சென்றது. இதில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினர்.

Updated On: 10 Aug 2021 12:50 PM GMT

Related News