/* */

அரக்கோணம் அருகே மண் கடத்தல் லாரி மற்றும் பொக்லைன் எந்திரம் பறிமுதல்

அரக்கோணம் அருகே ஏரியில் சூளைக்கு மண்கடத்திய பொக்லைன் மற்றும் லாரியை வட்டாட்சியர் பறிமுதல் செய்து போலீஸில் ஒப்படைத்தார்.

HIGHLIGHTS

அரக்கோணம் அருகே மண் கடத்தல் லாரி மற்றும் பொக்லைன் எந்திரம் பறிமுதல்
X

காட்சி படம் 

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த எஸ் ஆர் கண்டிகையில் ஏரியில் மர்ம நபர்கள் சிலர் பொக்லைன் மூலம் கிராவல் மண் எடுத்து லாரியில் கடத்திச் செல்வதாகவும், அதனால் மிக ஆழமான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதாக அரக்கோணம் வட்டாட்சியர் பழனி ராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது .

அதன்பேரில், அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன் அங்கு சென்றபோது, அங்கு பொக்லைன் எந்திரத்தின் மூலம் மண் எடுத்து லாரியில் ஏற்றிக் கொண்டிருந்த மர்ம நபர்கள் தாசில்தாரைப்பார்த்து தப்பி ஓடினர். உடனே வட்டாட்சியர், அங்கிருந்த லாரி மற்றும் பொக்லைன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தார்.

பின்னர் , இதுகுறித்து வட்டாட்சியர் பழனிராஜன் அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் செய்து பறிமுதல் செய்த வாகனங்களை ஒப்படைத்தார். இதனையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர் .

Updated On: 2 Aug 2021 4:56 PM GMT

Related News

Latest News

  1. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  5. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக அதிகரிப்பு
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் தொகுதியில் 68.26 சதவிகித வாக்குகள் பதிவு
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்