அரக்கோணம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளை

அரக்கோணம் அடுத்த குருவராஜப்பேட்டையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ 10லட்சம், 60 பவுன் நகை திருட்டு.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அரக்கோணம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளை
X

வீட்டினுள் பொருட்கள் சிதறிக்கிடக்கும் காட்சி

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த குருவராஜப்பேட்டை பகுதியை சேர்ந்த சுகாநந்தன் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்துவருகிறார். அவருடைய வீட்டில் பழுது பார்க்கும் பணிகள் நடந்து வருகிறது . இதனால் வீட்டிலிருந்து பொருட்கள் சிலவற்றை மட்டு்ம் எடுத்துக்கொண்டு அரக்கோணத்தில் இருக்கும் மற்றொரு வீட்டில் தற்காலிகமாக குடும்பத்துடன் தங்கி இருந்தார்.

இந்நிலையில் சுகாந்தன் கடந்த சனிக்கிழமை அன்று குருவராஜப் பேட்டை வீட்டில் கார்த்திகை தீபத்தன்று விளக்கு ஏற்றிவிட்டு வந்தார். பின்பு அவர் இன்று காலை மீண்டும் அங்கு சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு திறந்து இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் .

உடனே உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 60 சவரன் தங்க நகை ,ரூ : 10 லட்சம் ரொக்கம் மற்றும் விலையுயர்ந்த பல்வேறு பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து அரக்கோணம் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் விரைந்த போலீஸார் திருட்டுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்..

Updated On: 24 Nov 2021 2:08 PM GMT

Related News