Begin typing your search above and press return to search.
அரக்கோணம் தொகுதி தி.மு.க கூட்டணி வேட்பாளர் அறிமுகம்
ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி நடந்தது.
HIGHLIGHTS

அரக்கோணத்தில் திமுக கூட்டணி கட்சியின் விசிக வேட்பாளர் கெளதம் சன்னா அறிமுக கூட்டம் நடைபெற்றது.
தமிழக சட்டமன்ற தேர்தலில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளராக கௌதம் சன்னா போட்டியிடுகிறார். இவருக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், அரக்கோணம் தொகுதி மக்களுக்கு கௌதம் சன்னாவை அறிமுகப்படுத்தி பானை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அரக்கோணம் தொகுதியில் கூட்டணி கட்சியின் வேட்பாளரின் வெற்றி மிகவும் முக்கியம் எனவும் கட்சி தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
கூட்டத்திற்கு திமுக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் ஆர்.காந்தி மற்றும் தலைவர்கள்,தொண்டர்கள் கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள்,நிர்வாகிகள்,தொண்டர்கள் என திரளாக கலந்துகொண்டனர்.