/* */

சேந்தமங்கலத்தில் இரயில் நிலையம் அமைக்க 20 ஆண்டுகளாக கோரிக்கை

அரக்கோணம் அடுத்த சேந்தமங்கலத்தில் இரயி்ல் நிலையம் அமைக்க ஜமாபந்தியில் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

HIGHLIGHTS

சேந்தமங்கலத்தில்  இரயில் நிலையம் அமைக்க   20 ஆண்டுகளாக கோரிக்கை
X

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் இரயில் நிலையத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லும் இரயில்கள் வழியில் உள்ள , சேந்தமங்கலத்தைக் கடந்து செல்கின்றன.

அவை, அரக்கோணத்திற்கு அடுத்ததாக திருமால்பூர் இரயில் நிலையத்தில் நின்று செல்கிறது. இடையில் சேந்தமங்கலத்தைச் சுற்றி ஆலப்பாக்கம், சயனபுரம்,நெமிலி, வடகண்டிகை, பின்னாவரம், கணபதிபுரம்,மற்றும் தக்கோலம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அவற்றிலிருந்து கல்லூரிக்கு, வேலைக்கு என வெளியூர் செல்வோர்கள் தினசரி 3000க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மற்றும் மறைமலைநகர் பகுதிகளில் உள்ள கம்பெனிகளுக்கு இரயிலில் பயணிக்க சேந்தமங்கலத்தில் இருந்து பேருந்து மூலமாக திருமால்பூர்(அ) அரக்கோணம் ஆகிய இரயில் நிலையங்களுக்குச் சென்று பயணிக்கின்றனர். சில நேரங்களில் பேருந்து வரத்து தாமதமானால் இரயிலை தவற விட்டு , பயணத்தடை காரணமாக தினக் கூலிதொழிலாளிகள் உட்பட பெரும்பாலானோர் கஷ்டத்திற்கு ஆளாகின்றனர்.

எனவே இது போன்ற சிரமங்களைத்தவிர்க்க சேந்தமங்கலத்தில் இரயில்நிலையத்தை அமைத்திடக் கோரி பொதுமக்கள் கடந்த 20 ஆண்டுகளாக இரயில் நிரவாகத்திடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தமிழக முதல்வர் தனிப்பிரிவு, இரயில்வே பொதுமேலாளர்,மற்றும் அரக்கோணத்தில் நடந்து வரும் ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியர்ஆகியோரிடம் சேந்தமங்கலத்தில் இரயில்நிலையம் அமைக்க கோரி சேந்தமங்கலம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் சார்பில் மனு அளித்தனர்..

.

Updated On: 7 July 2021 4:06 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  2. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  3. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  4. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  7. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  8. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  10. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!