Begin typing your search above and press return to search.
தொடர் மழை பெய்து வரும் மாவட்டங்களுக்கு தேசியபேரிடர்மீட்பு படையினர் விரைவு.
அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர்மீட்புப் படையினர் தமிழத்தில் தொடர்மழை மாவட்டங்களில் மீட்பு பணிக்காக விரைந்தனர்.
HIGHLIGHTS

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்
தமிழகத்தில் தொடர்ந்து கனமழை அதிகனமழை பல மாவட்டங்களில் பெய்து வருகிறது. இந்நிலையில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, இராணிப்பேட்டை மாவட்டம் ,அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப்படையின் 4வது பட்டாலியனிலிருந்து தலா 20பேர் கொண்ட 6 குழுக்கள் தாயர்படுத்தப்பட்டனர்.
அவர்கள் ,தங்கள் மீட்புப்பணி உபகரணங்களுடன் தொடர்மழையால் பாதிப்புகளடைந்துள்ள ,தஞ்சை, நாகை, புதுக்கோட்டை,மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு புறப்பட்டு சென்றனர்.