அரக்கோணத்தில் தனியார் மருத்துவமனை ஊழியர் படுகொலை

அரக்கோணத்தில் தனியார் மருத்துவமனை ஊழியர் படுகொலை. தந்தை கொலைக்கு பழி தீர்த்த மகன்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அரக்கோணத்தில் தனியார் மருத்துவமனை ஊழியர் படுகொலை
X

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் காமராஜர் தெருவைச் சேரந்தவர் கோதண்டன். திருமணமாகி மனைவியைப் பிரிந்த இவர் பேரம்பாக்கத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கோதண்டன் நேற்று முன்தினம. வடமாம்பாக்கம் சுடுகாட்டில் நண்பர்களுடன் மதுஅருந்தியதில் போதை தலைக்கேறி அங்கேயே மயங்கிக் கிடந்தார. அப்போது அங்குவந்த ஒரு கும்பல் கோதண்டத்தை கத்தியால் சராமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியது .

கொலைச்சம்பவத்தை நேரில் பதுங்கியிருந்து பார்த்த கொலையுண்ட கோதண்டத்தின் உறவினர் சிவராஜ் அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். உடனே சிவராஜ் பெற்றோர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் டவுன் போலீஸார் கோதண்டனின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வந்தனர்

இதற்கிடையே இராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா அங்கு சென்று சம்பவ இடத்தைப் பார்வையிட்டு கொலைக் குறித்து கேட்டறிந்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார். இதனையடுத்து போலீஸார் விசாரணை செய்து சந்தேகத்தின் பேரில் இருவரை அழைத்துச் சென்று விசாரித்தபோது அவர்கள் அளித்த தகவலின்படி, கொலையுண்ட கோதண்டன், கடந்த 2014ல் அவனது சித்தப்பா முனிசாமியை சொத்துத்தகராறில் கழுத்தை அறுத்து கொன்றதாக போலீஸாரால் அப்போது கைது செய்யப்பட்டு பின்னர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

இருப்பினும் முனிசாமியின் மகன் தனது மனோஜ், தந்தையைகொன்ற கோதண்டத்தை பழி தீர்க்க காத்திருந்தார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று மனோஜ் நண்பர்களுடன் சேர்ந்து கோதண்டனுக்கு மதுவாங்கிக் கொடுத்து போதையில் மயங்க வைத்துக் கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அரக்கோணம் போலீஸார் மனோஜ், அவனது கூட்டாளிகளைத் தேடிவருகின்றனர்.

மேலும் அரக்கோணத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த இரு வாரங்களில் இது போன்ற கொலை, மற்றும் பெரும் குற்ற நிகழ்வுகள் அடிக்கடி தொடந்து நடந்து வருவதைக் கண்டு பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

Updated On: 26 Jun 2021 4:18 PM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  லவ் ரொமான்டிக் பர்த்டே கேக் -காதலர்களுக்கு இனிப்பான சேதி..!
 2. ஈரோடு
  ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அருகே மேம்பால தூணில் அரசு பேருந்து மோதி...
 3. லைஃப்ஸ்டைல்
  முடி உதிர்தல் பற்றிய பொதுவான கட்டுக்கதைகளும், கட்டுப்படுத்துவதற்கான...
 4. தமிழ்நாடு
  கன்னியாகுமரியில் பயங்கர கடல் சீற்றம்: பயணிகள் குளிப்பதற்கு அதிரடி...
 5. திருமங்கலம்
  மதுரை மாநகராட்சி சுகாதாரத் துறையினர் தூய்மை விழிப்புணர்வு பிரசாரம்
 6. சாத்தூர்
  கீழே கிடந்த செல்போனை ஒப்படைத்த சிறுமிக்கு போலீஸ் பாராட்டு
 7. உலகம்
  சுவாமி நித்தியானந்தா அடுத்த அதிரடி அறிவிப்பு: சமூக வலைதளங்களை கலக்கும் ...
 8. அரியலூர்
  அருங்காட்சியக சுற்றுச்சுவர் அமைக்க அடிக்கல் நாட்டி வைத்த அமைச்சர்...
 9. தேனி
  கூடலுார் போறீங்களா....கொஞ்சம் பிளான் பண்ணுங்க....
 10. திருப்பரங்குன்றம்
  மதுரையில் வேளாண் துறையின் சார்பில் பயிற்சியை துவக்கி வைத்த அமைச்சர்