அரக்கோணம் அருகே ரெயிலில் கடத்திய 14 கிலோ கஞ்சா பறிமுதல்

அரக்கோணத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் அதிகளவில் கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல்- சோதனையில் கஞ்சா பறிமுதல்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அரக்கோணம் அருகே ரெயிலில் கடத்திய 14 கிலோ கஞ்சா பறிமுதல்
X

அரக்கோணத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் அதிகளவில் கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் ரெயில்வே போலீசார் ஒவ்வொரு பெட்டியாக ஏரி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது ஆந்திர மாநிலம் கச்சிகுடாவில் இருந்து சென்னை எழும்பூர் வரை செல்லும் ரெயில் அரக்கோணத்திற்கு வந்தது. ரெயில்வே போலீசார் அதில் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சோதனையில் ஈடுபட்டனர். அதில் கடைசி பெட்டியில் கேட்பாரற்று பைகள் இருந்தது. அதனை திறந்து பார்த்தபோது அதில் 14 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. கஞ்சாவை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 3 April 2022 12:00 PM GMT

Related News