அளவுக்கதிகமாக மாத்திரைகளை சாப்பிட்ட முன்னாள் கடற்படை வீரர் பலி

அரக்கோணத்தில் மருத்துவர் ஆலோசனையின்றி கடைகளில் மாத்திரைகளை வாங்கி அளவுக்கதிகமாக சாப்பிட்ட முன்னாள் கடற்படைவீரர் பலியானார்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அளவுக்கதிகமாக மாத்திரைகளை சாப்பிட்ட முன்னாள் கடற்படை வீரர் பலி
X

மாதிரி படம்

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், அருகே வெங்கடேசபுரம் அகன் நகரை சேர்ந்த மோகன்ராவ்(42). முன்னாள் கடற்படை வீரர். இவர், கடந்த 19-ம் தேதி அன்று உடல்நிலை பாதிப்படைந்து அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் பரிசோதித்தில் அவருக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சனை இருந்தது தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து,. நரம்பியல் சார்ந்த சிகிச்சைக்காக அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆயினும், மோகன்ராவ் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார்.

இந்நிலையில், சிகிச்சையின்போது மோகன்ராவிற்கு எடுக்கப்பட்ட பரிசோதனை விபரங்களில் அவர் சந்தேகப்படும் விதத்தில் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை எடுத்துக்கொண்டதன் காரணமாக இறந்தது தெரியவந்தது. எனவே, மருத்துவர்கள் உறவினர்களிடம் விசாரித்தபோது, மோகன்ராவ், உடல்நிலை பாதிப்பின் போதெல்லாம் டாக்டர் ஆலோசனையைப் பெறாமல் தானே சுயமாகவே மருந்துகளை கடைகளில் வாங்கி உட்கொண்டது தெரிய வந்தது.

இதனையடுத்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது . அதன்பேரில் அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 24 Sep 2021 10:52 AM GMT

Related News