/* */

அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையில் தலைமை இயக்குநர் ஆய்வு

அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர்மீட்புப் படையின் 4வது பட்டாலியனில் தலைமை இயக்குநர் அதுல் கார்வால் இன்று ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையில்  தலைமை இயக்குநர் ஆய்வு
X

பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகள் குறித்தும் பயிற்சிகள் குறித்தும் ஆலோசனை வழங்கிய தலைமை இயக்குனர்

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்போணத்தில் தேசியபேரிடர. மீட்பு படையினரின் 4வது பட்டாலியனின் மையம் இயங்கி வருகிறது. மையத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைமை இயக்குநர் அத்தூல் கார்வால் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார் அப்போது அவர் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் .

பின்பு வீரர்களுடன் உடற்பயிற்சியினை செய்து ஆலோசனைகளை வழங்கியதைத் தொடர்ந்து பேரிடர் காலங்களில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் மோப்ப நாய்களையும் பார்வையிட்டார்

ஆய்வின் நிறைவாக வீரர்களுடன் கலந்துரையாடி குறை நிறைகளை கேட்டார். மேலும் பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகள் குறித்தும் பயிற்சிகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார் ஆய்வின்போது படைப்பிரிவின் சீனியர் கமாண்டன்ட் ரேகா நம்பியார் மற்றும் அதிகாரிகளின் கலந்துகொண்டனர் .

Updated On: 8 Feb 2022 7:22 AM GMT

Related News