Begin typing your search above and press return to search.
அரக்கோணம் அருகே மின் கம்பத்தில் உரசிய பசு மாடு மின்சாரம் தாக்கி பலி
அரக்கோணம் அடுத்த செம்பேடு கிராமத்தில் வயலில் உள்ள மின் கம்பத்தில் பசுமாடு உரசியபோது மின்சாரம் தாக்கி பலியானது
HIGHLIGHTS

மின் கம்பத்தில் உரசிய பசு மாடு மின்சாரம் தாக்கி பலியானது
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த செம்பேடு கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவரின் பசு மாடு அங்குள்ள ஒரு விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தது.
மேய்ந்து கொண்டிருந்த பசு அருகில் இருந்த மின் கம்பத்தில் உடலை உரசியது . அப்போது கம்பத்தின் வழியாகச்செல்லும் கம்பி ஒயர்கள் ஒன்றோடு ஒன்று உரசி கம்பத்தின் மீது பட்டது. இதனால் மின்கம்பம் வழியாக மின்சாரம் பசுவை தாக்கியதும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
அதனைக்கண்ட அருகிலிருந்தவர்கள் உடனே மின் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது மேலும், சம்பவம் குறித்து அறிந்து அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் தணிகாசலம் இது குறித்து வருவாய் அதிகாரிகளுக்கு தெரிவித்தார்