/* */

ரயில் பயணிகளுக்கு கொரோனோ விழிப்புணர்வு ஏற்படுத்திய நாட்டுப்புற கலைஞர்கள்

திருவாலங்காடு ரயில் நிலையத்தில் நாட்டுப்புறக் கலைஞர்கள் பாட்டுப்பாடி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

HIGHLIGHTS

ரயில் பயணிகளுக்கு கொரோனோ விழிப்புணர்வு ஏற்படுத்திய  நாட்டுப்புற கலைஞர்கள்
X

திருவாலங்காடு ரயில்நிலையத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்திய நாட்டுப்புறக் கலைஞர்கள்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில்வே போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்ட திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ரயில் நிலையத்தில், ரயில்வே போலீசார் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

அதில் நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்று கொரோனோ விழிப்புணர்வு ஏற்படும் வகையில், அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கைகளை கழுவுவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிந்திருத்தல் மற்றும் தேவையின்றி வெளியில் வருவதை தவிர்த்தல் ஆகியவற்றை வலியுறுத்தினர்.

தடுப்பூசிப் போட்டுக்கொள்வதின் அவசியம் குறித்தும் இசையமைத்து பாட்டுப்பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர், பயணிகளுக்கு துண்டு பிரசுரம், மாஸ்க் மற்றும் சானிடைசர் உள்ளிட்டவைகளை வழங்கினர்.

இதனையடுத்து, விழிப்புணர்வு நினைவாகக் பயணிகளுக்கு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, பழ மரக்கன்றுகளை வழங்கினார்.

அருகில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் ஆகியோருடன், திருவாலங்காடு ரயில் நிலைய அதிகாரி அம்ஜித், கிராம நிர்வாக அலுவலர் பாலசந்தர் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Updated On: 24 Aug 2021 5:09 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்