Begin typing your search above and press return to search.
அரக்கோணத்தில் கல்லூரி மாணவி திடீர் மாயம்
அரக்கோணத்தில் இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்ற கல்லூரி மாணவி திடீர் மாயம்.
HIGHLIGHTS

இராணிப்பேட்டை மாவட்டம்அரக்கோணம் ஹவுசிங் போர்டை சேர்ந்த கல்லூரி மாணவி, சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று காலை வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
இதனால், அவரது, தந்தை,மற்றும் வீட்டில் உள்ளவர்கள் சுற்று வட்டாரபகுதிகளில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் மாணவி, கிடைக்கவில்லை.
மாணவியின் தந்தை அரக்கோணம் டவுன் போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.