13 வயது சிறுமியை மிரட்டி கர்ப்பமாக்கிய சித்தப்பா போக்சோவில் கைது

பணப்பாக்கத்தில் மனைவியின் அக்கா மகளை மிரட்டி கர்ப்பமாக்கியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
13 வயது சிறுமியை மிரட்டி கர்ப்பமாக்கிய சித்தப்பா போக்சோவில் கைது
X

போக்சோவில் கைது செய்யப்பட்ட பிரபு.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த பணப்பாக்கம் அருந்ததியர் பாளையத்தைச் சேர்ந்த பிரபு(34 ), தனியார் கம்பெனி ஊழியர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன், மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் வேலூர் மாவட்டம், காட்பாடியில் பிரபு மனைவியின் அக்கா வசித்து வருகிறார். இவரின் மகள் 13 வயது சிறுமி 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி விடுமுறை என்பதால் சித்திவீடான பிரபுவின் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

அப்போது பிரபு , குடிபோதையில் மகளென்றும் பாராமல் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்படவே இது குறித்து அந்த சிறுமி தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனயைடுத்து, சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 7மாதம் கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்தனர். இதனையடுத்து அரக்கோணம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், மகள் முறையில் உள்ள சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்து கர்பமாக்கியது சித்தப்பா பிரபு என்பது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து போக்சோ பிரிவின் கீழ் பிரவுவை கைது செய்து சிறையிலடைத்தனர்.

Updated On: 21 Aug 2021 4:42 AM GMT

Related News

Latest News

 1. திருச்செங்கோடு
  ஏமப்பள்ளியில் வரும் 28ம் தேதி மின் நிறுத்த பகுதிகள் அறிவிப்பு
 2. நாமக்கல்
  நாமக்கல்லில் தமிழக முதல்வர் வருகை: மேடை அமைப்பு பணிகளை அமைச்சர்கள்...
 3. கும்மிடிப்பூண்டி
  பெரியபாளையம் அருகே ஸ்ரீ சாய்பாபா கோவில் 4-ம் ஆண்டு வருடாபிஷேக விழா...
 4. லைஃப்ஸ்டைல்
  லவ் ரொமான்டிக் பர்த்டே கேக் -காதலர்களுக்கு இனிப்பான சேதி..!
 5. ஈரோடு
  ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அருகே மேம்பால தூணில் அரசு பேருந்து மோதி...
 6. லைஃப்ஸ்டைல்
  முடி உதிர்தல் பற்றிய பொதுவான கட்டுக்கதைகளும், கட்டுப்படுத்துவதற்கான...
 7. தமிழ்நாடு
  கன்னியாகுமரியில் பயங்கர கடல் சீற்றம்: பயணிகள் குளிப்பதற்கு அதிரடி...
 8. மதுரை மாநகர்
  மதுரையில் பெண் பயணியிடம் தங்க நகை திருட்டு: போலீஸார் விசாரணை
 9. திருமங்கலம்
  மதுரை மாநகராட்சி சுகாதாரத் துறையினர் தூய்மை விழிப்புணர்வு பிரசாரம்
 10. சாத்தூர்
  கீழே கிடந்த செல்போனை ஒப்படைத்த சிறுமிக்கு போலீஸ் பாராட்டு