திருமணத்திற்கு வற்புறுத்தியதால் வங்கி அதிகாரி தூக்கிட்டு தற்கொலை.

அரக்கோணம் அருகே திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் வங்கி அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருமணத்திற்கு வற்புறுத்தியதால் வங்கி அதிகாரி தூக்கிட்டு தற்கொலை.
X

அரக்கோணம் அடுத்த மின்னல் கிராமத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அலுவலராக பணிபுரிந்து வந்த தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த பனோத் கார்த்திக்குமார்(27). இவர் அப்பகுதியிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார்.

இந்நிலையில், அவர் தங்கி இருந்த வீட்டில் துர்நாற்றம் வீசியதாக அப்பகுதியில் உள்ளவர்கள், அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே, அங்கு வந்த தாலுகா இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், பார்த்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. போலீசார் கதவை உடைத்து அறையினுள் பார்த்தபோது பனோத் கார்த்திக் குமார், மின்விசிறியில் தூக்கிட்டு சடலமாக இருந்தார்.

சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பனோத் கார்த்திக் குமாருக்கு வீட்டில் பெற்றோர்கள்,திருமண ஏற்பாடுகள் செய்ததாகவும், அவருக்கு அதில் விருப்பம் இல்லாததால் வீட்டில் உள்ளவர்களுடன் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது . மேலும் இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்..

Updated On: 10 July 2021 5:47 AM GMT

Related News