அரக்கோணம் கொலைசம்பவத்தில் மேலும் 2பேர் கைது
அரக்கோணத்தில் கொலைவழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவரைக் கொலை செய்த வழக்கில் மேலும் 2 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்
HIGHLIGHTS

அரக்கோணம் கொலை வழக்கில் மேலும் 2 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் கடந்தாண்டு நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கில் ராஜாபாதர் தெருவைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்தார்.
வந்த அவர்கடந்த 6ம் தேதி நண்பர் வீட்டில் மது அருந்தி கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம கும்பல் கார்திக்கை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். அது சம்பந்தமாக அரக்கோணம் டவுன் போலீஸார் வழக்கு பதிந்து கொலையாளிகளை தேடியதில் 8 பேரைபிடித்து சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். அதில் கிடைத்த தகவலின் பேரில் 6 பேரைக் கைது செய்து மேலும் இருவரைத் தேடிவந்தனர்.
இந்நிலையில் அரக்கோணம. சுவால்பேட்டை, கலைவாணர் தெருவைச்சேர்ந்த பரசுராமன்,மற்றும் சுப்பராயன் தெருவைச்சேர்ந்த ஷோபன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.
#Instanews #Tamilnadu #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #இராணிப்பேட்டை #அரக்கோணம் #கொலைவழக்கு #இருவர்கைது #Ranipet #Arakkonam #MurderCase #TwoArrested