/* */

ராணிப்பேட்டை கொரோனா தடுப்பூசி ஆரம்பம்

ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் கொரோனா தடுப்பூசியினை சுகாதார நல அலுவலர் வீராசாமிக்கு செலுத்தப்பட்டது

HIGHLIGHTS

ராணிப்பேட்டை கொரோனா தடுப்பூசி ஆரம்பம்
X

நெமிலி அடுத்த புன்னை கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு சுகாதார நிலையத்தில் கொரொனாவிற்கான முதற்கட்ட தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று துவங்கப்பட்டது, இதனை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கிளாஸ்டன் புஷ்பராஜ் கலந்துகொண்டு முகாமினை துவக்கி வைத்தார். ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் கொரொனா தடுப்பூசியினை சுகாதார நல அலுவலர் வீராசாமிக்கு செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து பகுதிநேர செவிலியர் ஆன பேபி என்பவர்களுக்கு செலுத்தப்பட்டது. மேலும் மாவட்டத்தில் 4300 கொரோனா தடுப்பூசி மருந்துகள் வந்திருப்பதாகவும் அதனை மாவட்டத்திலுள்ள அமைக்கப்பட்டுள்ள 14 தடுப்பூசி மையங்கள் மூலமாக நாள்தோறும் மாவட்டத்தில் 700 நபர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டனீ புஷ்பராஜ் தெரிவித்தார்.

Updated On: 16 Jan 2021 11:35 AM GMT

Related News