தொண்டி அருகே ஊரணியில் குளிக்கச் சென்று பெண் உயிரிழப்பு

தொண்டி அருகே ஊரணியில் குளிக்கச் சென்று பெண் உயிரிழப்பு. தொண்டி போலீஸார் விசாரனை.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தொண்டி அருகே ஊரணியில் குளிக்கச் சென்று பெண் உயிரிழப்பு
X

கோப்பு படம் 

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள தினையத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (37). இவருக்கும் வெட்டுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சித்ரா (32) என்பவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி முனீஸ்வரன் (15) என்ற மகன் உள்ளார். சித்ராவிற்கு வலிப்பு நோய் உள்ளதாகவும், 3 முறைக்கும் மேல் ஊரணியில் குளிக்கச் செல்லும் போது வலிப்பு வந்த நிலையில் குளிக்க வந்தவர்கள் காப்பாற்றியதாகவும் சொல்லப்படுகிறது.

தற்போது கணவர் கோவிந்தன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். சம்பவத்தன்று மகன் வெட்டுக்குளத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்ற நிலையில் மாலை நேரத்தில் பிள்ளையார் கோவில் ஊரணிக்கு சித்ரா குளிக்கக் சென்ற நிலையில் வலிப்பு வந்ததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். ஊரணியில் தனியாக குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. குளிக்கச் சென்றவர் காணவில்லை என உறவினர்கள் தேடி வந்த நிலையில் ஊரணி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததைக் கண்டு அதிர்ந்து போயினர்.

இது குறித்து தொண்டி போலீஸாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிந்து தொண்டி போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 28 Nov 2021 2:56 PM GMT

Related News