அரசு உத்தரவை மீறுவாேருக்கு அபராதம் விதிக்க கோரிக்கை

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அரசு உத்தரவை மீறுவாேருக்கு அபராதம் விதிக்க கோரிக்கை
X

தொண்டியில் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் போலீசார், கடை வீதிகளில் அரசு உத்தரவை அத்துமீறும் பொதுமக்களுக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தற்போது தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று இரண்டாம் அலையை கட்டுப்படுத்த புது கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மாஸ்க் அணியாமல் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் பொது இடத்தில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும் என்பன போன்ற பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் மோட்டார்பைக் மற்றும் 4 சக்கர வாகனத்தில் செல்வோர் மாஸ்க் அணியாமல் சென்று வருவதால் அவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.

மேலும் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள், பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் பெரும்பாலும் மாஸ்க் அணியாமலேயே நிற்கின்றனர். மேலும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் செல்லும் பயணிகளும் அதன் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களும் பெரும்பாலும் மாஸ்க் அணிவதில்லை. இதனால் கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது.எனவே சோதனை சாவடியில் வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே அபராதம் விதிக்கும் போலீசார் கடைத்தெரு ,பேருந்துகள் மற்றும் பேருந்து நிலையம் ஆகியவற்றிலும் முகக்கவசம் அணியாமல் இருக்கும் நபர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On: 20 April 2021 8:15 AM GMT

Related News

Latest News

 1. சினிமா
  'பொன்னியின் செல்வன்' படத்தை தாய்லாந்தில் பார்த்த வனிதா விஜயகுமார்..!
 2. சினிமா
  மும்பை ஓட்டலில் தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை
 3. லைஃப்ஸ்டைல்
  மற்றவர் காலில் விழுவது அவமானமா? வெகுமானமா?
 4. சினிமா
  'இந்தி தெரியாது போடா..!' - முதன் முதலில் தொடங்கி வைத்தவர் இயக்குநர்...
 5. நாமக்கல்
  2 வாரங்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் நரிக்குறவர் காலனி மக்கள்...
 6. சினிமா
  அல்லு ஸ்டூடியோஸ் - 'ராமலிங்கையாகாரு'க்கான கௌரவம்..!
 7. தேனி
  கதாசிரியர் சோலைமலையை கட்டி பிடித்த சிவாஜி கணேசன்
 8. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்
 9. நாமக்கல்
  காந்தி பிறந்த நாளில் கதர் துணிகளை வாங்கிய நாமக்கல் பா.ஜ.க.வினர்
 10. திருவண்ணாமலை
  102 வயது மூதாட்டிக்கு கலெக்டர் முருகேஷ் வாழ்த்து மடல் வழங்கி...