/* */

தொண்டி அருகே மீன் எண்ணைய் ஆலையை மூடக்கோரி மக்கள் சாலை மறியலில்

தொண்டி அருகே மீன் எண்ணைய் தயாரிக்கும் ஆலையை மூடக் கோரி கிழக்கு கடற்கரை சாலையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

தொண்டி அருகே மீன் எண்ணைய் ஆலையை மூடக்கோரி மக்கள் சாலை மறியலில்
X

தொண்டி அருகே மீன் எண்ணைய் தயாரிக்கும் ஆலையை மூடக் கோரி கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள மச்சூர் கிராமத்தில் பிஸ்மி அக்வாட்டிக் புரோடக்ட்ஸ் என்னும் மீன்களை பதப்படுத்தி எண்ணெய் தயாரிக்கும் ஆலை கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதிலிருந்து வரும் துர்நாற்றம் இப்பகுதி முழுவதும் பரவி மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாக கூறி, இப்பகுதி மக்கள் அடிக்கடி போராட்டம் நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலை வட்டாணம் ரோட்டிலிருந்து மச்சூர் வரையிலும் உள்ள கிராம சாலை சில நாட்களுக்கு முன்பு புதிதாக தார்சாலை போடப்பட்டது. இச்சாலையில் கனரக வாகனங்கள் செல்வதால் சாலை சேதமடைந்து வருவதாக கூறி கிழக்கு கடற்கரை சாலையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கபட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவாடானை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சரி செய்வதாக கூறினர். இதனையடுத்து சாலை மறியலை கைவிட்டனர். பின்னர் வட்டாணம் ஊராட்சி அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடந்தது.

அதில் ஒரு வருடத்தில் ஆலைக்கு செல்ல மாற்றுப்பாதையை ஆலை நிர்வாகம் அமைத்துக்கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்களுக்கு எவ்வித விளைவுகளும் ஏற்படாதவாறு சுற்றுச்சூழல் துறை சார்பில் ஆய்வு செய்யவும் என சமரச பேச்சுவார்த்தை நடத்தபட்டது. கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது.

Updated On: 20 Sep 2021 5:59 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  3. உத்திரமேரூர்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு
  4. காஞ்சிபுரம்
    சின்னம் பெறுவதில் சில கட்சிகளுக்கு சிக்கல் ஏன்? ஜி.கே. வாசன் விளக்கம்
  5. டாக்டர் சார்
    கோடையை குளிர்விக்கும் சப்ஜா..! சத்துகளின் .களஞ்சியம்.!
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை லோக்சபா தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு
  7. செய்யாறு
    செய்யாறு அருகே கல்குவாரிகள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை
  8. நாமக்கல்
    மோகனூர் சோதனைச் சாவடியில் தேர்தல் போலீஸ் பார்வையாளர் திடீர் ஆய்வு
  9. நாமக்கல்
    லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  10. ஆன்மீகம்
    பிறப்பு ஜாதகம் எப்படி எழுதறாங்க தெரியுமா..?